தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்!

சென்னையில் மழை நீர் அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்
சென்னையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்

By

Published : Nov 11, 2022, 3:16 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் மழைநீர்த் தேக்கம் அகற்றும் பணியில் மாநகராட்சிப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, சென்னை மண்டலம் 1, வார்டு 12-ல் உள்ள சந்நிதி தெருவில் மழைநீர்த்தேக்கம் அகற்றும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீட்டர்ஸ் ரோடு மற்றும் ஆர்ஓபி சாலையில் டிராக்டர் மோட்டார் மூலம் மழைநீர்த் தேக்கம் அகற்றும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, அடையாறு 4ஆவது மெயின்ரோடு, ஏஜிஎஸ் காலனியில் படகு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜா தோட்டத்தில் உள்ள மழை நீர்த்தேக்கத்தினை டிராக்டர் மோட்டார் மூலம் உறிஞ்சி மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்

தற்போது, சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதியில் நிரந்தரமாக மோட்டார் அமைக்கப்பட்டு உடனுக்குடன் நீர் வெளியேற்றப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் சாலையில் மழைநீர் தேக்கம் அதிகளவில் காணப்படவில்லை. சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் செயலைப் பாராட்டி பொதுமக்கள் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்

இதையும் படிங்க:'தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை' - திமுகவை விளாசிய மாஜி அமைச்சர் ஜெயக்குமார்!

ABOUT THE AUTHOR

...view details