தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை  கனமழை  வானிலை  இன்றைய வானிலை  வானிலை அறிக்கை  சென்னை வானிலை ஆய்வு மையம்  மழை நிலவரம்  rain  rain update  weather report  Chennai Meteorological Center  Meteorological Center  climate  rain status  மீனவர்கள்  எச்சரிக்கை
மழை

By

Published : Aug 10, 2021, 7:46 PM IST

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஆக.10) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

தமிழ்நாட்டில் மழை

ஆகஸ்ட் 11 : நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், பெய்யக்கூடும்.

வானிலை மையம்

ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 :நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14.08.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கனமழை

மழை பொழிவு நிலவரம்

கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் 13 செ.மீ, திருச்சிராப்பள்ளி விமான நிலையம் 12 செ.மீ, ஆம்பூர், தாமரைப்பக்கம் தலா 10 செ.மீ, பூண்டி, வாணியம்பாடி தலா 9 செ.மீ, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் தலா 7 செ.மீ, நாட்றம்பள்ளி, மதுரை விமான நிலையம் தலா 6 செ.மீ, மேலாளத்தூர் 5 செ.மீ, பூதலூர், சின்னக்கல்லார், ஆலந்தூர், சென்னை விமான நிலையம், சோழவந்தான், வாலாஜா, பந்தலூர் தலா 4 செ.மீ, சூளகிரி 3 செ.மீ, வல்லம், வந்தவாசி, குமாரபாளையம், தொழுதூர் தலா 2 செ.மீ, சத்தியமங்கலம், பெனுகொண்டாபுரம், தர்மபுரி தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக் கடல்:இன்று(ஆக 10) மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை (ஆக 11) தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் நலனுக்காக

அரபிக்கடல்:இன்று (ஆக 10) முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் மூவர் படுகாயம்; ராகுல் பயணம் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details