சென்னை : வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஜூன் 11) கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை :
வானம் ஓரளவு தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை : வடக்கு வங்க கடல் பகுதியில் இன்று (ஜூன் 11) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதன் காரணமாக,
ஜுன் 11 முதல் ஜுன் 13 வரை : தெற்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜுன் 11 முதல் ஜுன் 13 வரை: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜுன் 11 முதல் ஜுன் 13 வரை: மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.