தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நீடித்த நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தண்ணீருக்காக தவித்துவந்தனர். குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் விடிய விடிய மழை! - விடிய விடிய மழை
சென்னை: திருவான்மியூர், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து விடியும்வரை மழை பெய்துள்ளது.
rain
இந்நிலையில், கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னையில் சில தினங்களாக வானம் மேக மூட்டத்துடனும், அவ்வப்போது மழையும் பெய்துவருகிறது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் இதமான சூழ்நிலையை அனுபவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை திருவான்மியூர், சோழிங்கநல்லூர், மேடவாக்கம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து காலைவரை மிதமான மழை பெய்துவருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.