இது குறித்த அறிவிப்பில், ”தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் - today rain update
சென்னை: அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. 17, 18ஆம் தேதிகளில் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு ஆகிய கடல் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுமென்பதால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம். மேலும் தென் மாவட்டங்களிலும் வட உள்மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 24 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்