தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடமாநில இளைஞர்களை ரயிலில் தாக்கிய நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு - சென்னை

ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை தாக்கிய நபரை தேடப்படும் குற்றவாளியாக தமிழக ரயில்வே காவல்துறை அறிவித்து, துப்பு கொடுப்பவருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

வடமாநில இளைஞர்களை ரயிலில் தாக்கிய நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
வடமாநில இளைஞர்களை ரயிலில் தாக்கிய நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

By

Published : Feb 17, 2023, 10:50 PM IST

சென்னை: ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை தமிழ் பேசக்கூடிய நபர் ஒருவர் தாக்கக்கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. குறிப்பாக அந்த வீடியோவில், 'நீங்கள் எதற்கு இங்கே வருகிறீர்கள், நாங்கள் தான் இருக்கிறோமே, நாங்க எல்லா வேலையும் செய்து கொள்வோம்' என வடமாநில இளைஞர்களை தாக்கி தகாத வார்த்தையால் அந்த நபர் பேசி இருந்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு ஆபாசமாக பேசுதல், சிறுகாயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, எந்த ரயிலில் எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வடமாநில இளைஞர்களை தாக்கிய நபரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது புகைப்படத்தை தமிழக ரயில்வே காவல்துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நபர் பற்றிய விவரங்கள் தெரிந்தால் துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் தமிழக ரயில்வே காவல்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகா இந்தியாவின் ஒரு பகுதி தான், பாகிஸ்தான் எல்லை இல்லை - அன்புமணி ராமதாஸ் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details