தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஓடும் ரயிலில் தாக்குதலில் ஈடுபடும் நபருக்கு 3 ஆண்டுகள் சிறை"- ரயில்வே ஏடிஜிபி வனிதா வார்னிங்! - வடமாநில நபர் தாக்கியவர் கைது

வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து சென்னை ரயில்வே ஏடிஜிபி வனிதா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

"ஓடும் ரயிலில் தாக்குதலில் ஈடுபடும் நபருக்கு 3 ஆண்டுகள் சிறை"- ரயில்வே ஏடிஜிபி வனிதா வார்னிங்!
"ஓடும் ரயிலில் தாக்குதலில் ஈடுபடும் நபருக்கு 3 ஆண்டுகள் சிறை"- ரயில்வே ஏடிஜிபி வனிதா வார்னிங்!

By

Published : Feb 22, 2023, 6:45 AM IST

சென்னை:கடந்த 16ஆம் தேதி ஓடும் ரயிலில் வடமாநில நபர்களை ஒருவர் தாக்கும் வீடியோ வைரலானது. வழக்கின் தன்மையினை பொறுத்து சென்ட்ரல் ரயில்வே போலீசார் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாருடன் இணைந்து சைபர் கிரைம் உதவியுடன் நேற்று குற்றவாளியை கைது செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே ஏடிஜிபி வனிதா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது,
சமூக வலைதளங்களில் வடமாநிலத்தவரால் தமிழ்நாடு மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும், இதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்பது போலவும் பரப்பப்படும் செய்திகளை பார்த்து அதை மனதில் வைத்து அவர் வடமாநிலத்தவரை தாக்கியதாகவும், அவர்களால் இவருக்கு வேறு எந்த பிரச்னையும் இல்லை எனவும் கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்ததாக ஏடிஜிபி வனிதா கூறினார்.

மேலும், பொது இடங்களில் அரசியல், தனிப்பட்ட வெறுப்பு கருத்துகளையோ சொல்லக்கூடாது எனவும்; வடமாநிலத்தவர் அதிகமாக ரயில் மூலமாக பயணித்து வருவதால் இந்த வீடியோ மூலமாக வேறொரு எண்ணம் மக்கள் மத்தியில் பதிந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திற்காக மட்டுமே குற்றவாளியை உடனடியாக கைது செய்ததாகத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இவர் மீது பேச்சாலோ, சைகையாலோ சாதி, சமய உணர்ச்சிகளைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைத்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். வடமாநிலத்தவர்களையும் சாதாரண மனிதனாக பாருங்கள் என அவர் கூறினார்.

மேலும், ரயில்வே துறையில் பாதுகாப்பு குறை தொடர்பான எந்தவிதமான புகார்களும் 1512 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் எனவும்; வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இந்தியா போன்ற நாட்டில் மத, மொழி வேறுபாடு பார்க்க முடியாது எனவும்; பொது இடத்தில் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டால் உடனடியாக தண்டனை கிடைக்கும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என கைது நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் கூறினார்.

இதேபோல தென்காசியில் பாவூர்சத்திரம் பகுதியில் ரயில்வே பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட விவகாரத்தில், குற்றவாளியின் செருப்பில் இருந்த பெயின்ட் கரையை வைத்து கேரளாவில் வைத்து அனீஸ் என்பவரை கைது செய்ததாகவும், இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் பணிகளில் ரயில்வே போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது எந்த சமரசமும் கிடையாது எனவும்; அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக ரயில்வே காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறிப்பாக காவலர்களின் ஒத்துழைப்புடன் கடத்தப்படுகிறதா? எனவும் ரகசியமாக கண்காணித்து வருவதாகவும், அதில் ஈடுபட்ட நான்கு ரயில்வே காவல் துறையினரை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். கட்டுப்பாடுடன் செயல்படும் காவல்துறையில் நினைத்தது எல்லாம் செய்யமுடியாது, எழுத முடியாது என அவர் கூறினார்.

இதையும் படிங்க:ஹிஜாவு நிதி மோசடி வழக்கில் சிக்கிய ஏஜென்ட் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details