தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மொழிப்பெயர்ப்பில் ஹெச்.ராஜாவை மிஞ்சிய தங்கபாலு! - மொழிப்பெயர்ப்பு

கன்னியாகுமரி: கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் உரையை தவறாக மொழிப்பெயர்த்த ஹெச்.ராஜா வரிசையில், நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல்காந்தியின் உரையை தவறுதலாக மொழிப்பெயர்த்த தங்கபாலு இணைந்துள்ளார்.

தவறான மொழிப்பெயர்ப்பு

By

Published : Mar 14, 2019, 1:20 PM IST

நேற்று தமிழகம் வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு தமிழில் மொழிப்பெயர்த்தார்.

தவறான மொழிப்பெயர்ப்பு

அப்போது ஒட்டுமொத்த இன்ஸூரன்ஸ் துறையையும் நரேந்திர மோடி தன்னுடைய தன் தொழில்துறை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இதனை மொழிப்பெயர்த்த தங்கபாலு, நரேந்திர மோதி மக்களுக்காக அல்ல, தன்னுடைய நண்பர்களுக்காக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் என தவறுதலாக மொழிபெயர்த்தார்.

மேலும் ஜம்மு காஷ்மீரின் இன்ஸூரன்ஸ் துறை முழுவதும் அனில் அம்பானியிடம் கொடுக்கப்பட்டு விட்டது என ராகுல் காந்தி தெரிவித்தார். இதனை மொழிப்பெயர்த்த தங்கபாலு, நம்முடைய முக்கியமான பகுதியான ஜம்மு - காஷ்மீர் அனில் அம்பானிக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.

of course, நம்மை கலைஞர், காமராஜர் போன்ற பெரிய தலைவர்களுடன் ஒப்பிட முடியாது என்ற ராகுல்காந்தியின் உரையை, நான் தலைவர் கலைஞர் அவர்களை காமராஜருடன் ஒப்பிட மாட்டேன் என மொழிப்பெயர்த்து அனைவரையும் கொதிப்படையச் செய்தார். இதனைத்தொடர்ந்து அவரின் மொழிப்பெயர்ப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் மொழிப்பெயர்ப்பில் ஹெச்.ராஜாவை மிஞ்சிவிட்டார் தங்கபாலு என குறிப்பிட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details