சென்னை:இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர். ஜெகநாதன் நியமனம் செய்யப்படுகிறார். இவர், அப்பதவியில் பொறுப்பேற்றதில் இருந்து 3 ஆண்டுகள் பணியில் இருப்பார்.
கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 39 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். வேளாண்மைக் கல்லூரியின் முதல்வராகவும், ஆராய்ச்சியிலும் ஈடுபட்ட அனுபவம் உள்ளவர்.
ஆராய்ச்சியில் அதிக அளவில் அனுபவம் உள்ளதால் 55 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் 14 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டும் இருக்கிறார். 5 சர்வதேச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். ஆராய்ச்சி திட்டங்களுக்காக நிதி உதவி பெற்று ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் நிர்வாகப் பிரிவில் எட்டு ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் பணிபுரிந்துள்ளார். மேலும், பல்வேறு நாடுகளுக்கு ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக சென்று வந்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சூரப்பா மீீீதான அறிக்கைத் தயார்