தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது தொடரப்பட்ட தேர்தல் வழக்கு ரத்து!

Ops and ravindhranath case - தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது தொடரப்பட்ட தேர்தல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது தொடரப்பட்ட தேர்தல் வழக்கு ரத்து
Etv Bharat ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது தொடரப்பட்ட தேர்தல் வழக்கு ரத்து

By

Published : Jul 27, 2023, 6:31 PM IST

சென்னை:தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் தேனி சிறப்பு நீதிமன்றத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ப.ரவீந்திரநாத் ஆகியோர் மீது புகார் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்தப் புகாரில், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ப.ரவீந்திரநாத் ஆகியோர், தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், கல்வித்தகுதிகள் குறித்த தகவல்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாகவும் கூறி, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் புகாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் மீதான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேனி நீதிமன்றத்தில் புகார்தாரர் தாக்கல் செய்த புகார் மனுவுக்கு ஆதரவாக எந்த பிரமாண மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும்; பிரமாண மனு இல்லாமல் தாக்கல் செய்யப்படும் புகார் மனுவை ஏற்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம்; 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details