தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்விக் கட்டணத்தை திருப்பித்தர வேண்டும்: உயர் நீதிமன்றம் - HC

புதுச்சேரி: மாணவர்களிடம் அதிகமாக வசூலித்த கல்விக் கட்டணத்தை, புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் திரும்ப வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறைகேடாக வசூலிக்கப்பட்ட கல்விக்கட்டணத்தை திருப்பித்தரவேண்டும்!! மருத்துவ படிப்பு

By

Published : Jul 19, 2019, 6:50 PM IST

புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ படிப்பிற்கு மாணவர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையிலான, கல்விக் கட்டண நிர்ணயக்குழு சிலவரங்களுக்கு முன்பே நிர்ணயம் செய்து கல்லூரிகளுக்கு உத்தரவிட்டது.

ஆனால், புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்துள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ மாணவர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ”மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை சம்பத்தப்பட்ட இரு கல்லூரிகளும் திருப்பி கொடுக்க வேண்டும் அல்லது அந்தத் தொகையை அடுத்த கல்வியாண்டில் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத்தில் இருந்து கழித்துக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகும் மீதித்தொகை இருந்தால் அதை மாணவர்களிடமே திருப்பி வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details