புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த க. வெங்கடேசன் கழகக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவந்ததாகவும் கூறி அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
புதுச்சேரி: ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ க. வெங்கடேசன் தற்காலிகமாக அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவைக் காக்க விளக்கேற்றி உறுதிமொழி எடுங்கள் - ஓபிஎஸ், ஈபிஎஸ் கடிதம்