தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டுக்குள் புகுந்த மழைநீரை அகற்ற முடியாமல் பொதுமக்கள் அவதி

சென்னை: வீட்டுக்குள் புகுந்த மழைநீரை மூன்று நாள்களாகியும் அப்புறப்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

water
water

By

Published : Nov 28, 2020, 6:35 PM IST

நிவர் புயல் காரணமாக, சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று நாள்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்தது. இதனால் சென்னை-புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.

சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், லட்சுமி நகர், வரதராஜபுரம் போன்ற பகுதிகள் பெருமளவு மழைநீர் சூழப்பட்டு வெள்ளக்காடாக மாறியது. அதன் பிறகு அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வுமேற்கொண்டு மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுத்து அப்பகுதி முழுவதும் தற்போது மழைநீரை வெளியேற்றிவிட்டனர்.

ஆனால் தாம்பரம் அருகே உள்ள அஞ்சுகம் நகர்ப் பகுதியில் மழை நின்று மூன்று நாள்களாகியும் மழைநீரை அப்புறப்படுத்தாமல் குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கினால் குடிசை வீடுகளிலிருந்த துணி, மின் விசிறி, தொலைக்காட்சி போன்ற பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக இப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.

வீட்டுக்குள் புகுந்த மழைநீர்

இங்கு தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி தாம்பரம் நகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தும் அவர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், மழை வெள்ளத்தில் வீட்டிலிருந்து துணிகள், அத்தியாவசிய பொருள்கள் என தங்களது உடைமைகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.

இந்த வெள்ள நீரை வெளியேற்றக்கோரி அலுவலர்களிடம் முறையிட்டபோது, அவர்கள் தங்களுக்கு உணவுகளை வழங்கி வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்கு கொடுத்ததாகவும், ஆனால் மழை நின்று மூன்று நாள்களாகியும் அதற்கான முயற்சிகளை அவர்கள் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details