தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வார்டு மறுவரையறை கருத்துக் கேட்புக் கூட்டம்: பொதுமக்களுக்கு அழைப்பு - Tamilnadu election commission

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் வார்டு மறுவரையறை தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் டிசம்பர் 20ஆம் தேதிமுதல் ஐந்து நாள்கள் நடைபெறும் எனத் தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மறுவரையறை ஆணையம்
தமிழ்நாடு மறுவரையறை ஆணையம்

By

Published : Dec 17, 2021, 6:05 PM IST

சென்னை:புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளின் வார்டு மறுவரையறை தொடர்பாக, தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் சார்பில் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்கேட்பு டிசம்பர் 20ஆம் தேதிமுதல் 24ஆம் தேதிவரை சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

வார்டு மறுவரையறை கருத்துக் கேட்புக் கூட்டம்

மறுவரையறை ஆணையத்தின் கருத்துக்கேட்புக் கூட்டத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களின் ஆட்சேபனைகள், கருத்துகளை நேரடியாகத் தெரிவித்துக் கொள்ளலாம். மேலும், இதன் விவரங்களை மனுவாகவும் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மறுவரைறை ஆணையத் தலைவர், ஆணையத்தின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி சுவர் இடிந்து விபத்து: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details