தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

382ஆவது மெட்ராஸ் தினம்: பொதுமக்களுக்கு போட்டிகள் நடத்த உள்ள மாநகராட்சி

மெட்ராஸ் தினத்தினை கொண்டாடும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.

madras
மெட்ராஸ் தினம்

By

Published : Aug 19, 2021, 9:52 AM IST

மாணவர்கள், பொதுமக்களுக்கு 382ஆவது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்த உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு மெட்ராஸ் தினம் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மெட்ராஸ் தினத்தினை கொண்டாடும் வகையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள், கலைஞர்கள் பங்குபெறும் வகையில் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.

குடிசைப் பகுதிகளில் சுவர்களில் வரையப்பட்ட வண்ண ஓவியங்களை செல்பி புகைப்படம் எடுத்து 94451 90856என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். இதில் சிறந்த சுவர் ஓவியங்கள் மாநகராட்சியின் ட்விட்டர் தளத்தில் பகிரப்படும்.

மாநகராட்சி பூங்காக்கள், நீர்நிலைகளில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுத்து twittergchennaicorpஇல் பகிரலாம். ஆர்வமுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மெட்ராஸ் தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும்,

இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாகக் கொண்டாட CSR நிதியினை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களுடைய விவரங்களை https://forms.gle/8KYXEhgjuTK7opfR7 என்ற இணைப்பில் சென்று பதிவேற்றம் செய்யலாம்.

சென்னை மாநகராட்சி

போட்டி விவரங்கள் :

ஆகஸ்ட் 20, 21: சிங்காரச் சென்னை குறித்த ஓவியப் போட்டி (14 வயதிற்கு உள்பட்டவர்கள்), சிங்காரச் சென்னை குறித்த புகைப்படப்போட்டி

ஆகஸ்ட் 22: மாநகராட்சி கட்டடச் சுவர்கள், பாலங்களின் கீழுள்ள இடங்கள் மற்றும் இதரப் பொது இடங்களை மறுவடிவமைக்கும் திட்ட வரைபடப் போட்டி

மேற்குறிப்பிட்ட போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் தங்களுடைய படைப்புகளை https:/:chennaicorporation.gov.in/gcc/online-services/comp/home.jsp என்ற இணையதள இணைப்பில் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள போட்டிகளுக்கான நாள்களில் பதிவேற்றம் செய்யலாம்.

சென்னை மாநகரின் அடையாளங்களைக் குறிக்கும் சிற்பங்களை தயார் செய்து ஆகஸ்ட் 22 முதல் 28ஆம் தேதி வரை நேரடியாக மாநகராட்சி தலைமையிடத்தில் உள்ள சென்னை சீர்மிகு நகரத் திட்ட அலுவலகத்தில் வழங்கலாம்.

இதுகுறித்த தகவல்களை 94451 90856 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஆளுநரை இன்று சந்திக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ்: திமுக அரசுக்கு எதிராக புகார்?

ABOUT THE AUTHOR

...view details