தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரக்கிளைகளை அகற்ற மாநகராட்சியை இனி தொடர்பு கொள்ளலாம்! - மரக்கிளை அகற்ற இனி மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம்

சென்னை: சாலையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலுள்ள மரக்கிளைகளை அகற்ற மாநகராட்சியைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை மரக்கிளை அகற்ற இனி மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம்!
சாலை மரக்கிளை அகற்ற இனி மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம்!

By

Published : Jan 2, 2020, 1:10 PM IST

சென்னை மாநகராட்சி பகுதிகளிலுள்ள சாலை ஓரங்களில் சுமார் ஒரு லட்சத்து 61 ஆயிரம் மரங்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பகுதிகளிலுள்ள மரங்கள் உயரமாக வளந்துள்ளன. இந்த மரங்களின் வளர்ச்சியால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து நேராமலும், மின் விளக்குகள், போக்குவரத்து ஆகியவற்றிற்கு இடையூறாக இருக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி, மரங்களின் ஆயுள்காலத்தை நீட்டிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்த மரக்கிளைகளை வெட்டிப் பராமரிக்கும் பணியில் 11 பூங்கா மேலாளர்கள், 358 ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் மரக்கிளைகளை வெட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, 1.20 கோடி ரூபாயில் மரக்கிளைகளை அகற்றும் 6 ஹைட்ராலிக் இயந்திரங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டும் 54 ஆயிரம் மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் தங்களது பகுதியில் பாதிப்பிற்குள்ளாகும் வகையிலுள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டுமென்றால், 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் இயந்திரங்கள் மூலம் மரக்கிளைகளை வெட்டி பராமரிப்பு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்களது புகார்களை 1913 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்!

ABOUT THE AUTHOR

...view details