தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’எதை செய்யக்கூடாது என்பதற்கு முந்தைய அதிமுக அரசு உதாரணம்’ - பழனிவேல் தியாகராஜன் தாக்கு - அதிமுக குறித்து பழனிவேல் தியாகராஜன்

”மக்களுக்கு எதை செய்யக்கூடாது என்பதற்கு முந்தைய அதிமுக அரசு உதாரணம் என்றும், எதை செய்யவேண்டும் என்பதை உணர்ந்து கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணையை ஸ்டாலின் வழ்ங்கி உள்ளதாகவும் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளா.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

By

Published : May 21, 2021, 6:32 PM IST

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் வாரிசுகள், தீவிர காயமுற்றோர் என 17 நபர்களுக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப்பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக, அதிமுக ஆட்சியில் அவர்களுக்கு கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, தங்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி வழங்கவேண்டும் என வலியுறுத்திவந்த அவர்கள், அண்மையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் கோரிக்கை மனுவை அளித்திருந்தனர். அந்தக் கோரிக்கை மனுவை முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றதன் விளைவாக, இன்று அவர்களுக்கு இந்தப்பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு நிதி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார். அதில், ”மக்களுக்கு எதை செய்யக்கூடாது என்பதற்கு முந்தைய அதிமுக அரசு உதாரணம். எதை செய்யவேண்டும் என்பதை உணர்ந்து தலைவர் ஸ்டாலின், ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் குடும்பத்தாருக்கு அரசுப் பணி ஆணையை இன்று (மே.21) வழங்கினார். அந்த நிகழ்வில் உடனிருந்தது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details