தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் 2022-23 இன்று தாக்கல் - தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று (மார்ச்.18) தாக்கல் செய்யப்பட உள்ளது.

dmk governments first full fledged tamil nadu budget  tamil nadu budget  today budget session  tamil nadu budget  ptr to present tamil nadu budget  பட்ஜெட் 2022-23 இன்று தாக்கல்  தமிழ்நாடு பட்ஜெட் 2022-23  தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்  பட்ஜெட் தாக்கல்
தமிழ்நாடு பட்ஜெட்

By

Published : Mar 18, 2022, 7:28 AM IST

Updated : Mar 18, 2022, 9:25 AM IST

சென்னை: முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.

2022-2023 ஆம் ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை அரங்கில் இன்று (மார்ச் 18) தாக்கல் செய்யப்படுகிறது. காகிதமில்லா சட்டப்பேரவை திட்டத்தின் கீழ் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் இருக்கைக்கு முன்பாகவும், கணினி வைக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில், நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து அலுவல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு எத்தனை நாள்கள் நடத்தப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படுவதுடன், மானிய கோரிக்கை மீதான விவாதத்தை எப்போது நடத்துவது என்பது குறித்தும் முடிவெடுக்கப்படவுள்ளது.

கரோனா தொற்றுப்பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட நிலையில், தொற்றுப்பரவல் குறைந்துள்ள நிலையில், ஜார்ஜ் கோட்டை அரங்கில் கூட்டத்தொடர் நடத்தப்படுகின்றது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற சிறப்பு கூட்டம் மட்டும் ஜார்ஜ் கோட்டை அரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாடு நெடுஞ்சாலை திட்டங்கள் - மத்திய அமைச்சருடன் ஏ.வ.வேலு சந்திப்பு

Last Updated : Mar 18, 2022, 9:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details