சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா. இவர் மே 26ஆம் தேதி பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் தங்கி பணியாற்றிவரும் கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயண பெருமாள் என்பவரும் பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்துவந்த காவல் துறையினர் சிகிச்சைப் பெற்று வந்த நாராயண பெருமாளிடம் விசாரணை நடத்தினர். அதில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரெட்டேரி பாலம் அருகே தன்னை மிரட்டி தன்பால் புணர்ச்சியில் ஈடுபட்டதாகவும், அவருடைய இச்சை தீர்ந்த பின் தனது பிறப்புறுப்பை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவித்தார்.
சிசிடிவியில் பதிவாகியுள்ள சைகோ இளைஞன் உருவம் அவர் கொடுத்த தகவலின் பேரில் மாதவரம் தனிப்படை காவல் துறையினர், ரெட்டேரி பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் என தெரியவந்தது.
மேலும் அவரின் செயல்பாடுகள் சைக்கோ நபரை போல் உள்ளதால், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. அந்த சைகோ இளைஞனை நேரில் பார்த்தாலோ? அல்லது தகவல் தெரிந்தாலோ? காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.