திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம் சென்ற குஷ்புவை காவல்துறையினர், சென்னை முட்டுக்காடு அருகே கைது செய்தனர்.
ஏற்கனவே காவல்துறையினர் தடை விதித்திருந்த நிலையில், பாஜக போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்ட குஷ்பு கைதுக்குப் பின்னர் அவர் திருமாவளவனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது," திருமாவளவனை எப்போதும் அண்ணன் என்றே அழைப்பேன். அந்தளவுக்கு அவர் மீது மரியாதை வைத்திருந்தேன்.
திருமாவளவன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் - குஷ்பு! ஆனால் எப்போது பெண்களுக்கு எதிராக கேவலமாக கருத்து தெரிவித்தாரோ, எப்படி அவரை அண்ணன் என்று அழைக்க முடியும். திருமாவளவன் மன்னிப்பு கேட்கும் வரைக்கும் நாங்கள் விடப்போவதில்லை. பாஜக சார்பில் போராட்டம் தொடரும்" என்றார்.