இதுகுறித்து மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பாதிப்பிற்கு உள்ளானோர் 80 விழுக்காட்டினர், அதற்கான முக்கிய அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்டவைகள் இல்லாமல் உள்ளனர் என அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தகையோர் வேறு உடல் நலப்பிரச்சினைகளுக்காக மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அதனால் அவர்களுக்குச் சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவக் குழுவினருக்கும்,108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், லேப் டெக்னீசியன்கள் உள்ளிடோருக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரோனா சிகிச்சை பிரிவில் மட்டுமின்றி, இதர பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவப்பணியாளர்களுக்கும் பாதுகாப்பு கவசங்களை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.