தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

28,000 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அரசு பதிலளிக்க உத்தரவு - chennai high court

வேதாரண்யம் வேதபுரீசுவரர் கோயிலுக்கு சொந்தமான 28 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை பாதுகாக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது.

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அரசு பதிலளிக்க உத்தரவு
கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அரசு பதிலளிக்க உத்தரவு

By

Published : Jun 22, 2022, 6:45 PM IST

சென்னை: திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அருள்மிகு வேதபுரீசுவரர் கோயிலுக்கு சொந்தமாக 28,609 ஏக்கர் நிலம் இருப்பதாக அரசு மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், ஆனால் அவற்றில் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை முறையாக பாராமரித்து பாதுகாக்கக் கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனுக்கள் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது மனுக்களை முறையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க:பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details