சென்னை : தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரின் முன்னாள் உதவியாளராக இருந்தவர் முரளிதரன். இவரது இரண்டாவது மனைவி ராஜேஷ்வரி. மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முன்னாள் உதவியாளர் ஆவார். இவர்கள் இருவருக்கும் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக திருப்பரங்குன்றம் தேனி, சென்னை விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் பத்து மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சோதனையில் தங்கம், வெள்ளி பொருட்களும் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.