சென்னை:சுங்கத்துறை அலுவலகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார் முகமது இர்பான் அகமது. இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுங்கத் துறையில் விமான உளவுத்துறை பிரிவின் சூப்பரண்ட் ஆக பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில் இவரும் இவரது மனைவி தஷிம் மும்தாஜூம் கடந்த ஜனவரி 19ஆம் தேதி சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக லக்னோ விற்கு விமானம் மூலம் செல்ல திட்டமிட்டிருதனர். அதனடிப்படையில் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் சென்ற அவர்கள், லக்னோ செல்லும் விமானத்தை தவற விட்டுள்ளனர்.
அப்போது பெங்களூருவில் அவர்களது உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது, அவர்களிடம் இருந்து கணக்கில் வராத 75 லட்ச ரூபாய் பணம், 169 கிராம் தங்கம், ஐந்து விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள முகமது இர்பான் அகமது வீட்டில் பெங்களூரு வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் 64 ஆயிரம் பணம், 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் வெள்ளி பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.