தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு தொழிற்கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தொழிற்கல்வி விழிப்புணர்வு
தொழிற்கல்வி விழிப்புணர்வு

By

Published : Jul 21, 2021, 3:34 PM IST

Updated : Jul 22, 2021, 7:04 AM IST

14:18 July 21

சென்னை: அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு தொழிற்கல்வி, அதன் வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை:தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொழில் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் குழுவின் அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேற்று (ஜூலை20) வழங்கப்பட்டது.

அந்த அறிக்கையின் படி, மருத்துவப் படிப்பில் உள்ளது போல, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்குப் பரிந்துரைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

மேலும் நீதிபதி முருகேசன் குழு ஆய்வு செய்து வழங்கியுள்ள பரிந்துரைகள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமலாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளதாகத் தெரிகிறது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிற மாநிலங்களில் உள்ள பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் கட்டமைப்புகள், வசதிகள் சிறப்பாக உள்ளன. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தொழிற்கல்வி படிப்புகளில் சேர்வதில் இடைநிற்றல் இருப்பது புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மேலும் தரமான கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்வி மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு தொடர் கண்காணிப்பதற்கான முறைகளை உருவாக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி, நவீன தகவல் தொழில் நுட்பத்தையும், கருவிகளையும் பயன்படுத்தி கற்பிக்க வேண்டும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு தொழிற்கல்வி குறித்தும், அதில் மாணவர்கள் சேர்க்கை குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெற்றோருக்கு ஆலோசனை

அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களைக் கண்டறிந்து அதனையும், அறிவுத்திறன்களையும் மேம்படுத்துவதற்கான முறைகள் குறித்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். 

கிராமப்புறம் மற்றும் மலைப் பகுதிகளில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இடை நிற்றலை குறைக்க வேண்டும். 

கிராமப்புறங்களில் உள்ள பள்ளிச் செல்லும் வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி கல்வி கற்பிக்க மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

தற்பொழுது உள்ள பாடத்திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வகையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு மாநில அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கி உள்ளதாகத் தெரிகிறது. 

இதையும் படிங்க:ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்தது

Last Updated : Jul 22, 2021, 7:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details