தயாரிப்பாளர் ஸ்ரீராம் சென்னை மயிலாப்பூரில் தனது குடும்பத்திருடன் வசித்துவந்தார். இவர் இயக்குநர் மணி ரத்னத்தின் 'பம்பாய்', 'திருடா திருடா' ஆகிய படங்களை தயாரித்துள்ளார். மேலும் 'சத்ரியன்', 'ஆசை', 'தசரதன்' உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.