தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணமோசடி வழக்கை ரத்து செய்யக்கோரிய தயாரிப்பாளர்; மத்திய குற்றப்பிரிவு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - Actor soori money laundering case

நடிகர் சூரியிடம் 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரை ரத்து செய்ய கோரி திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தொடர்ந்த மனுவிற்கு மத்திய குற்றப்பிரிவு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Actor soori money laundering case
பணமோசடி வழக்கை ரத்து செய்யக்கோரிய பிரபல தயாரிப்பாளர்; மத்திய குற்றப்பிரிவு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By

Published : Nov 27, 2020, 4:10 PM IST

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த "வீரதீர சூரன்" என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். இப்படத்தில் நடித்ததற்காக வழங்க வேண்டிய 40 லட்சம் ரூபாய் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒருநிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன், விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறினர்.

அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து 2.70 கோடி ரூபாயை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக காவல்துறையில் நடிகர் சூரி அண்மையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் மீது பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு 8 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:நடிகர் சூரி நில மோசடி வழக்கு: 2ஆவது முறையாக ஊராட்சித் தலைவரிடம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details