பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் அதன் தயாரிப்பு முறைகள் பற்றியும், அதனை உட்கொள்ளுவதன் மூலம் உடலில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பதப்படுத்தப்படும் உணவை தயாரிக்கும்போது சுவையை அதிகரிக்க ஏதுவாக பலவிதமான வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகிறது.
உணவுப் பொருள்கள் பாக்கெட்டின் பின்புறத்தில் உள்ள லேபிளில் குறிப்பிட்டப்பட்டுள்ள நீளத்தைப் பார்ப்பதுதான் உணவு எவ்வளவு பதப்படுத்தப்பட்டது என்பதை தீர்மானிக்க எளிதான வழி. நீண்ட பட்டியல், அதிக பதப்படுத்தப்பட்டவை உள்ள உணவாகும் என்று ஹிரானந்தனி மருத்துவமனையின் ஆலோசகர் உட்சுரப்பியல் வல்லுநர் டாக்டர் தேஜல் லாதியா கூறியுள்ளார்.
இயற்கை சர்க்கரைகள் பழம், தானியங்கள், காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகளுடன் காணப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளில் இந்த முக்கிய ஊட்டச்சத்துக்கள் இல்லை.
அதிக அளவு ஆரோக்கியமற்ற கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் .
கூடுதல் கலோரிகள் - 'வெற்று' கலோரிகள் என அழைக்கப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவின் மூலம் எடை அதிகரிப்பு, உயர் ரத்த சர்க்கரைக்கு வழிவகுக்கிறது. இது இதய நோய்கள், புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.