சென்னை:தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே. ஆர். நந்தகுமார் கூறுகையில், "கரோனா பரவல் காரணமாக பல மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாததால், பள்ளி வாகனங்களும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே பள்ளி வாகனங்களுக்கு எஃப்.சி செய்வதற்கு ஒவ்வொரு வாகனத்திற்கும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி தொகை போக ரூ.15 ஆயிரம் லஞ்சமாக வழங்க வட்டாரப் போக்குவரத்துறை அலுவலர்கள் கேட்கின்றனர். இதில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.