சென்னை: தமிழ்த் திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட மாபெரும் நடிகர்களுக்குப் பாடல்கள் எழுதி பிரபலம் அடைந்தவர் கவிஞர், பாடலாசிரியர் புலமைப்பித்தன். எம்ஜிஆரின் 'குடியிருந்த கோயில்' படத்தில் இடம்பெற்ற 'நான் யார், நான் யார், நான் யார்' என்ற பாடலை எழுதியதன் மூலம் இவர் பிரபலம் அடையத் தொடங்கினார்.
அதன்பிறகு எம்ஜிஆரின் 'அடிமைப் பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் புலமைப்பித்தனின் பாடல் வரிகள் இடம்பெற்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வடிவேலுவின் 'இம்சை அரசன் 23.ம் புலிகேசி', 'தெனாலிராமன்', 'எலி' உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் இடம்பெற்றிருந்தன.