சென்னை: சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 23) கேள்வி நேரத்தின்போது திமுக பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார் பேசுகையில், பேராவூரணி தொகுதியில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் அவர்களின் வாழ்க்கையில் அரசு விளக்கேற்றுமா என கேள்வி எழுப்பினார்.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்: அமைச்சர் - அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்துமென தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டகுடி சி.வி. கணேசன் கூறியுள்ளார்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்: அமைச்சர்
இதற்குப் பதில் அளித்துப் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி சி.வி.கணேசன், ’திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 36 இடங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டதில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருப்பதாகவும், அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபட்டு, படித்த இளைஞர்களுக்கு வேலை பெற அரசு உதவி செய்யுமென’ அமைச்சர் உறுதியளித்தார்.