தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைதிகள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு - tamilnadu prisoners

சென்னை: தமிழ்நாடு சிறைகளில் உள்ள கைதிகள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கைதிகள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு
கைதிகள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு

By

Published : Apr 10, 2020, 12:57 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிறைகளில் நெருக்கடியை குறைக்க வேண்டும் என்றும், 7 ஆண்டுகள் மற்றும் அதற்கு கீழ் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் கைதாகி சிறைகளில் உள்ளவர்களுக்கு ஜாமீன் மற்றும் பரோல் வழங்க உயர்மட்டக்குழுவை அமைத்து முடிவு செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு சிறைகளில் இருந்த ஆயிரக்கணக்கான விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கைதிகளை அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு பரோல் வேண்டி பல கைதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறைகளில் கைதிகள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாகவும், புதிய கைதிகளை அடைக்க 37 மாவட்ட மற்றும் கிளை சிறைகள் தனி சிறைகளாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையைப் பொறுத்தவரை, புதிய கைதிகள் யாரும் புழல் சிறையில் அடைக்கப்படுவதில்லை எனவும், சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்படுவதாகவும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். கரோனா பரவும் அபாயம் உள்ள அசாதாரண சூழலில், சிறைகளில் புதிதாக 58 செல்போன்கள் வாங்கப்பட்டு, வீடியோ கால் மூலமாக 15 ஆயிரம் கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழக சிறைத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:மீன்பிடித் தடை காலம் குறைக்கப்படுமா? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details