தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நடத்தப்பட்டது போலியான திருமணமே” - தீட்சிதர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மனு - தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தீட்சிதர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

priest petition to cancel child marriage case  child marriage case  case of child marriage  Chidambaram Nataraja Temple  Chidambaram child marriage case  தீட்சிகர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மனு  சிதம்பரம் நடராஜர் கோயில்  குழந்தை திருமணம்  குழந்தை திருமணம் வழக்கு  சென்னை உயர் நீதிமன்றம்  தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  போலியாக திருமணம்
குழந்தை திருமணம்

By

Published : Nov 3, 2022, 9:18 AM IST

Updated : Nov 3, 2022, 11:16 AM IST

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2021ஆம் ஆண்டு, 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக, தீட்சிதர்களுக்கு எதிராக, கடலூர் அனைத்து மகளிர் போலீஸில் மாவட்ட பெண்கள் நல ஊரக அலுவலரான தவமணி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பல தீட்சிதர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் குழந்தை திருமணம் ஏதும் நடத்தப்படவில்லை என்றும், வழக்கை ரத்து செய்யக் கோரி, சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களான தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தீட்சிதர் குல வழக்கப்படி நடராஜர் - சிவகாமி அம்மன் சன்னதியில் போலியாக திருமணம் நடத்தப்படும் எனவும், இவ்வாறு பல குடும்பத்தினர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தியுள்ளதாகவும், அவை உண்மையான திருமணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீட்சிதர்களுக்கும், நடராஜர் கோயிலுக்கும் உள்ள நன்மதிப்பை கெடுக்கும் விதமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவப் பரிசோதனை செய்ததால் மனதளவில் பாதிக்கப்பட்ட தனது மகள், பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்து வருவதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா..!

Last Updated : Nov 3, 2022, 11:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details