தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் அதிகரித்த கொசு தொல்லை - மனு தாக்கல்செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தல் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய முறையீட்டை மனுவாகத் தாக்கல்செய்தால் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் (Madras High court) தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னை

By

Published : Nov 17, 2021, 3:49 PM IST

சென்னை:சென்னையில் கொசுக்களின் தொல்லை அதிகமாகிவிட்டதாகவும், அதைத் தடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் வகையில், தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் நீதிபதிகள் துரைசாமி, சத்யநாராயண பிரசாத் அமர்வில் முறையீடுசெய்தார்.

டெங்கு கொசு அதிகரிப்பைத் தடுக்கக் கோரி 2019ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், கொசு ஒழிப்பில் முறையாக நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை என்பதால், தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் கோரிக்கைவைத்தார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து மனுவாகத் தாக்கல்செய்தால் விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்

ABOUT THE AUTHOR

...view details