தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆகஸ்டில் குடியரசுத் தலைவர் சென்னை வருகை - சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு! - திரெளபதி முர்மு சென்னை வருகை

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆகஸ்ட் 6ஆம் சென்னை வரவுள்ளார். முர்மு முதல் முறையாக அரசு முறைப் பயணமாக தமிழ்நாடு வருகிறார்.

President
சென்னை

By

Published : Jul 24, 2023, 9:52 PM IST

சென்னை:சென்னை பல்கலைக் கழகத்தின் 165 ஆவது பட்டமளிப்பு விழா வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். முதல் முறையாக அரசு முறைப் பயணமாக சென்னைக்கு வருகை தரும் குடியரசு தலைவரை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை கிண்டியில் கலைஞர் நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்று, நேரில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தார். குடியரசுத் தலைவருக்கு ஏற்ற வகையில் மருத்துவமனை திறப்பு தேதி மாற்றப்பட்ட நிலையில், இறுதியில் குடியரசுத் தலைவர் வர இயல வில்லை.

அப்போது குடியரசுத் தலைவர் வெளிநாடு சென்றுவிட்டதால் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வர முடியவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 15 ஆம் தேதி கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கலைஞர் நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வர முடியாத சூழலில், இப்போது சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வர இருக்கிறார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரெளபதி முர்மு முதல் முறையாக அரசு முறைப் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தர இருக்கிறார்.

இதற்கு முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் சிவராத்திரி விழாவை ஒட்டி குடியரசுத் தலைவர் முர்மு தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். பிப்ரவரி 18ஆம் தேதி காலையில் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

அதன் பின்னர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அன்று மாலையில், சிவராத்திரி விழாவை ஒட்டி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்குச் சென்றார். அங்கு நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் முர்மு கலந்து கொண்டார். இந்நிலையில், தற்போது சென்னைப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரவுள்ளார்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details