சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 22ஆம் தேதி லேசான அறிகுறியுடனான கரோனா பாதிப்பு இருந்தது. இதனையடுத்து அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே விஜயகாந்த் வீட்டிலிருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்தை, பிரேமலதா கவனித்து வந்தார்.
இந்நிலையில், விஜயகாந்த் குடும்பத்தினர் மீண்டும் கரோனா பரிசோதனை செய்தனர். இதில் விஜயகாந்த மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:விவசாயிகளை ஏமாற்றும் விஷவாயு எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் கடும் தாக்கு