தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 22ஆம் தேதி லேசான அறிகுறியுடனான கரோனா பாதிப்பு இருந்தது. இதனையடுத்து அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே விஜயகாந்த் வீட்டிலிருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த்தை, பிரேமலதா கவனித்து வந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:'பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 28ஆம் தேதி கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய்த்தொற்று உறுதியான நிலையில், செப்டம்பர் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.