தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி அனுமதி - இந்தியா கோவிட்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு சோர்வு அல்லது பக்கவிளைவுகள் ஏற்படாது என்று எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆய்வு தெரிவித்தது.

pregnant women allow to take covid vaccine
pregnant women allow to take covid vaccine

By

Published : Jul 2, 2021, 11:44 PM IST

சென்னை: கர்ப்பிணிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதியளிக்கப்படாமல் இருந்தது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு சோர்வு அல்லது பக்கவிளைவுகள் ஏற்படாது என்று எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆய்வு தெரிவித்தது.

இந்த நிலையில், கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒன்றிய சுகாதாரத் துறை இன்று அனுமதியளித்துள்ளது. தடுப்பூசி போடுவதற்கு கோவின் தளத்தில் முன்பதி செய்த பின், அருகில் உள்ள தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தொழில்நுட்ப கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஆய்வு கூட்டத்தில் முடிவு

ABOUT THE AUTHOR

...view details