கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் கடந்த மே 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
’கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தலைமைச் செயலகம் வந்து பணிபுரிய விலக்கு’
தலைமைச் செயலகத்தில் இணைநோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இறையன்பு ஐஏஎஸ்
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், இணை நோயுள்ள பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என தலைமைச் செயலக துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.