தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செம்பரம்பாக்கம் உபரி நீர் திறப்பு : அடையாற்றில் வெள்ளப்பெருக்கு - Chembarambakkam Lake Water release

நிவர் புயல் காரணமாக, சென்னையில் தொடர் மழை பெய்து வருவதால், அடையாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அடையாற்றில் வெள்ளப்பெருக்கு
அடையாற்றில் வெள்ளப்பெருக்கு

By

Published : Nov 25, 2020, 1:58 PM IST

நிவர் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி 22 அடி கொள்ளளவை எட்டியுள்ளதால், ஏரியிலிருந்து இன்று (நவம்பர் 25) பிற்பகல் 12 மணி முதல் 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து, அடையாறு ஆற்றுப் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆபத்தினை உணராது வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க :செம்பரம்பாக்கம் உபரி நீர் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details