தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மண்பாண்ட தொழிலாளர்கள் மண் அள்ளலாம் - அமைச்சர் துரைமுருகன் - துரைமுருகன்

சென்னை: மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் இனி சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

duraimurugan
duraimurugan

By

Published : Sep 9, 2021, 12:50 PM IST

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் அனுமதி, மண் பரிசோதனைக்கு பிறகே மண் எடுக்க வேண்டும் என சூழல் இருந்த நிலையில்; தமிழ்நாடு அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசு சார்பில் எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என கடந்த ஜூலை 30ல் வெளியிடப்பட்டது.

தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் மண் எடுக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்காக தமிழ்நாடு அரசு ஒரு புதிய முடிவு எடுத்திருக்கிறது.

அதன்படி 1.5 அடிக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது கனிமவளங்களை எடுப்பது ஆகாது என்பதால் 1.5 மீட்டர்வரை மண் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

எனவே மண்டபாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர்வரை மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details