தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு: பாஜக, அதிமுக தவிர பிற கட்சிகள் எதிர்ப்பு - election campaign 2021

80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டுள்ளதற்கு பாஜக, அதிமுக தவிர பிற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

postal-voting-for-those-over-80-opposition-from-parties-other-than-bjp-and-aiadmk
80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு: பாஜக, அதிமுக தவிர பிற கட்சிகள் எதிர்ப்பு

By

Published : Mar 1, 2021, 8:18 PM IST

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

பொள்ளாச்சி ஜெயராமன்(அதிமுக): 80 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். புதிய விதிமுறைகள் குறித்து விரிவாக தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டோம். மேலும், வாக்காளர் அடையாள அட்டையை இணையதளத்தில் சரி பார்த்துக்கொள்ள வசதிகள் செய்து தர வேண்டும். கரோனா தொற்று பாதித்தவருக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு: பாஜக, அதிமுக தவிர பிற கட்சிகள் எதிர்ப்பு

ஆர்.எஸ். பாரதி(திமுக):கடந்த தேர்தலின்போது, கண்டெய்னரில் கண்டெடுக்கப்பட்ட பணம் குறித்த தகவல் இதுவரை இல்லை. கடந்த தேர்தல்களில் நடைபெற்ற தவறுகள் மீண்டும் நடைபெறாதவாறு செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். 80 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிப்பதற்காக குளறுபடிகளை நீக்க நடவடிக்கை வேண்டும். தபால் ஓட்டை பயன்படுத்திதான் பிகாரில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசு அறிவிப்பிற்கு கையெழுத்திடுவது தேர்தல் விதி மீறல். கரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் வாக்கு எண்ணிக்கை ஒரே இடத்தில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாத காலம் இருப்பது சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும். தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. கரோனா சூழலில் அதிகமானோர் வாக்கு எண்ணும் மையத்தில் கூடினால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

பாலசந்திரன்(பாஜக):வாக்களிக்க வரும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே வரிசைகள், முதியோருக்கு தனி வரிசை மற்றும் முன்னுரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். குற்றப் பிண்ணனி கொண்ட வேட்பாளர்களின் குற்ற விவரங்களை தொலைக்காட்சிகளில் விளம்பரபடுத்த வேண்டும்.
பால் கனகராஜ் (பாஜக):பொது ஊரடங்கில் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளை தேர்தல் நேரத்தில் கடைபிடிக்கப்பட வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிப்பதற்கு தபால் ஓட்டு முறை கொண்டுவந்ததை வரவேற்கிறேன்.

நல்லதம்பி(தேமுதிக):கடந்த தேர்தலில் போடப்பட்ட குற்ற வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேள்வியெழுப்பினோம்.

வாகன சோதனைகளின் போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும்.

தாமோதரன் (காங்கிரஸ்):பணப்பட்டுவடாவை தடுத்து நிறுத்தினால்தான் 234 தொகுதிகளுலும் தேர்தல் நியயமாக நடைபெறும். 80 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்கும் முறையை முறைப்படுத்த வேண்டும்; பிகார் தேர்லில் தபால் ஓட்டுகளில்தான் முறைகேடு நடைபெற்றது. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு வாக்களிக்க உரிய வசதி செய்து தர வேண்டும். குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

வீரபாண்டியன்(சிபிஐ):தேர்தல் விதிமுறைகளை தமிழில் அச்சடித்து விநியோகிக்க வேண்டும். பிகாரில் அப்பட்டமாக தேர்தல் விதிமுறை மீறப்பட்டது, இதுபோன்று தமிழ்நாட்டில் நிகழாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பிரதமர் மோடி, அமித்ஷா வருகையின் போது தேர்தல் விதிமீறல் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் வாக்கு பதிவு நடைமுறையில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இதையும் படிங்க:தேர்தல் நடத்தை விதிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details