தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெறும் 37 பேரால் என்ன சாதிக்க முடியும்? என்றவர்களுக்கு சரியான பதிலடி! - தமிழ்

சென்னை: அஞ்சல் துறையின் சார்பில் நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கி.வீரமணி

By

Published : Jul 17, 2019, 10:49 AM IST

தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் காலியாக உள்ள 1000 பணி இடங்களுக்கான தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு தேர்விற்கு முந்தைய நாள் மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பெறாது எனவும், ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வினை எதிர்கொள்ளவேண்டுமெனவும் அறிவித்தது. இந்த அறிவிப்பு தேர்வெழுத இருந்தவர்களை மன ரீதியான பாதிப்பிற்கு ஆளாக்கியது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தேர்வை ரத்து செய்யவேண்டும் அல்லது ஒத்திவைக்கவேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் கட்சிகளை மறந்து எதிர்ப்புக் குரல் கொடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டுத்தொடரில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் மத்திய அரசின் ஆணையை ரத்துசெய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினனர். நாடாளுமன்றத்திலும் திமுக, அதிமுக உறுப்பினர்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதன்விளைவாக, அஞ்சல் துறையின் சார்பில் நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். அதுமட்டுமின்றி, தமிழ் உள்பட மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அறிவிப்பை திராவிடர் கழகம் வரவேற்பதாகவும், 'வெறும் 37 பேர் நாடாளுமன்றத்திற்குள் சென்றால் என்ன சாதிக்க முடியும்?' என்று கேட்டவர்களுக்கு இதுதான் சரியான பதிலடி என்றும் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மாநில உணர்வுகளையும், உரிமைகளையும், மொழிகளையும் மதிக்கும் போக்கு இந்தப் புள்ளியிலிருந்தாவது மத்திய அரசு தொடங்கவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் அழுத்தமான கோரிக்கை என்றும் கி.வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details