சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் அகில இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் சச்சின் சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் குஜராத், ஒடிசா, மும்பை, கர்நாடகா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான வல்லுநர்கள் கலந்து கொண்டனர். அப்போது, அகில இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.
கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும் - இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்கம் வலியுறுத்தல் - architech association
சென்னை: கட்டுமான துறைக்கென்று தனி அமைச்சகம் தேவை என, அகில இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்கதினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
sachin chanthiran
இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த கட்டுநர் வல்லுநர்கள் சங்க தலைவர் சச்சின் சந்திரன், கட்டுமான துறைக்கென்று மத்திய அரசு ஒரு அமைச்சகம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் கட்டுமான துறை சார்ந்த பிரச்னைகள் விரைந்து முடிக்கப்பட்டு, தேவைகள் பூர்த்தி செய்யப்பட எளிதாக இருக்கும் என்று தெரிவித்தார்.