சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த செல்வம் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு, பிரஷ் பயன்படுத்தாமல் திமுக கொடியைக் கொண்டு உதயநிதி ஸ்டாலின் உருவத்தை இன்று (நவ. 27) வரைந்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து விதமாகவும், அவர் நடித்த கலகத் தலைவன் திரைப்படம் வெற்றி பெற வேண்டியும், மீண்டும் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்தும் வகையில் ஓவியம் வரைந்துள்ளார்.