அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில், ”மனித உரிமை மீறல்களுக்கு வித்திடும் என்.ஐ.ஏ என்று சொல்லப்படக்கூடிய வரம்பற்ற அதிகாரத்தை வழங்கியதை கண்டித்தும், உபா சட்டத்தில் சட்ட திருத்தம் கொண்டுவந்திருக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திவருகிறோம்.
தேசிய புலனாய்வு முகமை தொடக்கத்தில் வெறும் 78 வழக்குகளை எடுத்து நடத்தியது. அனால் 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வழக்குகளின் எண்ணிக்கை 272 ஆனது. அதாவது பாஜக அரசு முஸ்லீம்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மக்களின் நலனுக்கு வேண்டி போராடுபவர்களை ஒடுக்குவதற்காக அதிகமான வழக்குகளை எடுத்துக்கொண்டுள்ளது.