தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முடிவடைந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம்..! - பொண்ணியின் செல்வன் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாக படப்பிடிப்பு முடிவடைந்ததாக அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ponniyan selvan  ponniyin selvan movie first part  ponniyin selvan movie first part come to an end  cini news  tamil movie latest update  movie update  பொன்னியின்செல்வன்  பொன்னியின்செல்வன் முதல் பாகம்  முடிவடைந்த படப்பிடிப்பு  பொண்ணியின் செல்வன் படப்பிடிப்பு  சினிமா செய்திகள்
பொன்னியின்செல்வன்

By

Published : Sep 19, 2021, 6:17 AM IST

சென்னை: லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் சரித்திர பிரமாண்ட படைப்பு “பொன்னியின் செல்வன்”.

இப்படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

முடிவுக்கு வந்த பிரமாண்ட படைப்பு

இப்படத்தின் படப்பிடிப்பானது ஐதராபாத், மத்தியப்பிரதேசம் போன்ற பல இடங்களில் நடத்தப்பட்டது. இறுதியாக பொள்ளாச்சியில் படப்பிடிப்பானது நிறைவுபெற்றுள்ளது. இத்துடன் முதல் பாகம் படபிடிப்பு முடிவடைந்தது என்று நேற்று (செப். 17) படக்குழு அறிவித்தது.

பல தலைமுறகளாக கொண்டாடப்பட்டு வரும் கல்கியின் நாவல் பொன்னியின் செல்வனை பலர் படித்து பரவசமாகியுள்ளனர். இதனை பலர் படமாக்க நினைத்தனர். ஆனால் அந்த முயற்சி முடியாமல் போனது.

தற்போது இதனை முடித்துக் காட்டியுள்ளார் மணிரத்னம். மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” எடுக்கிறார் என்றதும், படம் ரிலிஸுக்கு முன் நாவலை முதலில் படித்துவிட வேண்டும் என்று ஆவலில் உலகம் முழுக்க பலர் இதை இப்பொழுது படித்து வருகிறார்கள்.

மேலும் படத்தின் எதிர்பார்ப்பும் உலகம் முழுக்க அதிகரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு 2022 ல் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செப்டம்பர் 24ஆம் தேதி வருகிறாள் ‘சிண்ட்ரெல்லா’

ABOUT THE AUTHOR

...view details