தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எப்போதும் முதலிடத்தில் பொன்னியின் செல்வன்! - சென்னை  புத்தக கண்காட்சி

சென்னை: புத்தகக் காட்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொன்னியின் செல்வன் புத்தகத்தையே வாசகர்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள் என புத்தக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்

ponniyin selvan
ponniyin selvan

By

Published : Jan 12, 2020, 8:30 AM IST

சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 9ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதனிடையே விடுமுறை நாளான நேற்று எராளமான மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்ததால், நுழைவு சீட்டைப் பெற அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்ந்தது.

அங்கு வந்திருந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், சிறியவர்கள், வயதானவர்கள் என பலதரப்பட்ட மக்கள் பலவைகயான புதங்கங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள்
எழுத்தாளர்களின் படைப்புகளை அவர்கள் முண்ணிலையில் வாசகர்கள் வாசித்து, தங்களுக்கு பிடித்த வரிகளை சுட்டிக்காட்டினர். மக்கள் அதிக அளவில் எந்த புத்தகங்களை வாங்கி செல்கிறார்கள் என கேட்டபோது, மாணவர்கள் அதிக அளவில் பெரியார், அம்பேத்கர் புத்தகங்களையும், கம்யூனிச புத்தகங்களையும் வாங்கி செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
சென்னை புத்தகக் கண்காட்சி
இது தொடர்பாக பேசிய நிவேதிதா பதிப்பகத்தின் சண்முகம், "பெரியவர்கள் ஆன்மிகம், ஜோதிடம் தொடர்பான புத்தகங்களை அதிகம் வாங்குகிறார்கள். குழந்தைகள் மேஜிக் புத்தகங்கள், கதை புத்தகங்கள், குறு நாவல்கள் அதிகம் வாங்குகிறார்கள். இளைஞர்கள் புதிய சிந்தனை கொண்ட புத்தகங்களையும் கம்யூனிச சித்தாந்த நூல்கள், காரல் மார்க்ஸ், சே குவேரா போன்றவர்களின் புத்தகங்களையும் வாங்குகின்றனர்.
பெண்கள் நாவல்கள் அதிகம் வாங்கி செல்கிறார்கள். சு. வெங்கடேசனின் வேல்பாரி, எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்கள் அதிகம் விற்பனையாகிறது. வாசகர்களில் பெரும்பாலானோர் 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தையே வாங்கிச் செல்கின்றனர்" என்றார். புத்தகக் காட்சிக்கு அதிக அளவில் மக்கள் வந்ததால் சென்னை அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details