சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று (ஜனவரி 12) முதல் நாளை (ஜனவரி 14) வரையில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 706 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 11 ஆயிரத்து 6 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் பிற ஊர்களிலிருந்தும் மேற்கண்ட மூன்று நாட்களுக்கு, 8 ஆயிரத்து 478 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 19 ஆயிரத்து 484 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு, ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 4,830 சிறப்பு பேருந்துகள் என, ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6 ஆயிரத்து 459 பேருந்துகள் என மொத்தமாக 17,589 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.