தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (ஜன. 14) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை: தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி - பிரதமர் நரேந்திர மோடி
பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களுக்கு தனது சமூக வலைதளம் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Pongal festival: pm modi wishes in Tamil in twitter
இதுகுறித்து மோடியின் ட்விட்டர் பதிவில், "தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்" என்று தனது வாழ்த்துச்செய்தியைப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது - பார்வையாளராக ராகுல்காந்தியும் பங்கேற்பு